'கிராம நிர்வாக அதிகாரி என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான, பணி ஒதுக்கீட்டு கவுன்சிலிங், வரும், 19 முதல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:வி.ஏ.ஓ., பதவிகளில் நேரடி நியமனம் செய்ய, பிப்., 28ல், எழுத்துத்தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூலை, 1ல், வெளியாகின. பின், தேர்வு பெற்றவருக்கு, ஆக., 1 முதல், 8 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. ரேங்க் பட்டியலின்படி, தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு, வரும், 19 முதல், 23 வரை, கலந்தாய்வு நடக்கிறது. இதற்கான கூடுதல் தகவல்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment