சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப, இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
அந்த வகையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 அல்லது ரூ.6 அளவுக்கு உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு இந்த அளவுக்கு ஒரே நாளில் உயர்த்த வாய்ப்பில்லை என்றும் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment