Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 6, 2016

    தனியொரு பெண்ணாகக் களம் இறங்கி வெற்றி மேல் வெற்றி குவித்த ஜெயலலிதா!

    ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் தனியொரு பெண்ணாகக் களம் இறங்கி, சாமானியத் தொண்டர்கள் நிறைந்த அதிமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அந்தக் கட்சியைத் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் ஜெயலலிதா. கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களையும், தொண்டர்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரசியல் வித்தகர். "அம்மா என்ன சொன்னாலும் சரி...அம்மா எடுக்கும் முடிவு சரியாகத்தான் இருக்கும்' என்று கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் அவருக்குப் பின்னால் அணி திரண்டு நிற்கும் அளவுக்குக் கட்சியை தனது விரல் அசைவில் வைத்திருந்தவர். தவறுகளையும் திருத்தத் தயங்காதவர்: கடந்த 2001, பேரவைத் தேர்தலுக்கான அதிமுக அறிக்கை தயாரிப்பின் போது கட்சிக்குள் ஒரு விவாதம் எழுந்தது. விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பாக பிரச்னை எழுப்பப்பட்டது. ஆண் தொழிலாளர்களுக்கு இணையாக பெண் தொழிலாளர்களுக்கும் கூலியை வழங்குவோம் என்ற அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் வெளியிடலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால், இந்தக் கருத்தை அதிமுக நிர்வாகிகள் சிலர் மறுத்து, அது கிராமத்தில் சரியாக எடுபடாது என்றனர். இதுகுறித்து நேரடியாக விசாரித்து, அதன் உண்மை நிலையை அறிந்து அந்த அறிவிப்பை வெளியிடாமல் கைவிட்டார் ஜெயலலிதா. கட்சியினரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும், அவர்கள் ஏதேனும் கருத்தைக் கூறினால் அதுதொடர்பாக மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அதன் உண்மை நிலையை ஆய்ந்து அறிந்து அதைச் செயல்படுத்தத் தயங்காதவர். அதிமுக என்னும் பேரியக்கத்தைக் கட்டிக் காத்து அந்தக் கட்சியை எம்.ஜி.ஆருக்குப் பிறகு உயிர்ப்புடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா. அவரது தலைமையில் அதிமுக குவித்த வெற்றி வரலாறுகள்: 1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக 168 இடங்களில் போட்டியிட்டு, 164 இடங்களில் வென்று ஆட்சியில் அமர்ந்தது. 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 18 இடங்களில் வென்று, மத்தியில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாஜக கூட்டணி அரசில் அதிமுக அங்கம் வகித்தது. 2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 132 இடங்களில் வென்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது. 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் 150 இடங்களில் வென்று, ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். தனித்து வெற்றி: 2011 ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அனைத்து மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம்- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37-இல் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. மேலும், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 227-இல் நேரடியாகவும், 7-இல் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லைச் சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. தமிழகத்தில் 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016-இல்தான். மேலும், 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 ( மக்களவையில் 37, மாநிலங்களவையில் 13) ஆக உயர்ந்தது. இது தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை. இது மட்டுமன்றி, 2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது. 

    No comments: