வங்கக் கடலில் அந்தமான் அருகே, புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. வங்கக் கடலில், நவ., 30ல் உருவான, 'நடா' புயல், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை தாண்டி, அரபிக் கடலுக்கு சென்றது.
இப்புயல், நேற்று காலை, கடலிலேயே கரைந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் அந்தமான் அருகே, இரு தினங்களுக்கு முன், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, விசாகப்பட்டினத்தில் இருந்து, 1,260 கி,மீ., ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து, 1,310 கி.மீ., தெற்கு நிகோபாரிலிருந்து, 260 கி.மீ., தொலைவில், நேற்று மாலை மையம் கொண்டிருந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயல் சின்னமாக உருவாகும்; இன்னும் இரு தினங்களில், விசாகப்பட்டினத்தை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி வடக்கு கடலோர மாவட்டங்களில், டிச., 9 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
No comments:
Post a Comment