மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சோ.ராமசாமி (82) மாரடைப்பு காரணமாக இன்று காலை 5 மணி அளவில் காலமானார்.
இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். சோ ராமசாமி 1934 அக்டோபர் 5-ல் சென்னையில் ஸ்ரீநிவாசன், ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார்.
இவர் 1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். பத்திரிக்கை ஆசிரியர், வழக்கறிஞர், நகைச்சுவை நடிகர், திரைப்பட இயக்குநர் என பன்முக தன்மை கொண்டவர்.
பத்திரிக்கை துறையின் சிறந்த சேவைக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment