Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 5, 2016

    ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது; அப்பல்லோ மருத்துவமனை

    ayalalithaa heath very critical Apollo Hospital, New Reportமுதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.நீர்ச்சத்து  குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனு மதிக்கப்பட்டார்.


    பல்வேறு   பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித் தது. லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.  சிங்கப்பூரில் இருந்து   பிசியோதெரபி நிபுணர்களும் வந்து உடல் உறுப்புகள் அசைவுப் பயிற்சி அளித்தனர்.

    இதன் காரணமாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் 90 சதவீதம் சுயமாக சுவாசிப்பதாக அறி விக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா கடந்த மாதம் 19-ந்தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வேறு ஒரு  அறைக்கு மாற்றப்பட்டார்.

    72 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, எப்போது விரும்புகிறாரோ, அப்போது வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவ மனையின் தலைவர் டாக் டர் பிரதாப் ரெட்டி கூறி னார். இந்த நிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று பிற்பகல் திடீரென மாரடைப்பு  ஏற்பட்டது. அவர் உடல் நிலையில் பின் னடைவு காணப்பட்டது.

    இதையடுத்து அவர் அவசரம், அவசரமாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். இதய மருத்துவ நிபுணர்கள், நுரையீரல் மருத்துவ நிபுணர் கள், தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் ஆகியோர் ஒருங் கிணைந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

    முதல்-அமைச்சர் ஜெய லலிதாவுக்கு   “கார்டியாக் அரெஸ்ட்” என்று கூறப்படும் இதயம் செயல் இழப்பு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான சிகிச்சையைத் தீவிரப்படுத்தினார்கள்.

    இதற்கிடையே ஜெய லலிதாவுக்கு  ஏற்கனவே சிகிச்சை  அளித்துள்ள லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ்  டாக்டர்களுடன் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தொடர்பு கொண்டு  பேசினார்கள். அந்த டாக்டர்களிடம் தற்போது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல் நலம் பின்னடைவு பற்றி விளக்கமாக கூறப்பட்டது.

    லண்டன் டாக்டரும், எய்ம்ஸ் டாக்டர்களும் புதிய சிகிச்சை முறை ஒன்றை செய்யும்படி அறிவுறுத்தினார்கள். அதன்படி முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் இதயம் தொடர்ந்து சீராக இயங்குவதற்காக செயற்கை இதய செயல்பாட்டு கருவியை (எக்ஸ்ட்ராகார்போரியல் மெம்பிரன் ஆக்சிஜெனசன் -ஈசிஎம்ஓ Extracorporeal Membrane Oxygenation  ) பொருத்தி னார்கள்.
    இதன் பலனாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் சுவாசம் சீரானது. அவர் உடல் நிலையில் இரவு 10 மணிக்குப் பிறகு லேசான முன்னேற்றம் காணப்பட்டது.

    செயற்கை கருவியால் ஜெயலலிதாவின் சுவாசம் சீரானாலும் கூட அவர் உடல்நிலையில் திருப்தி கரமான     முன்னேற்றம் கொண்டு வர டாக்டர்கள் அடுத்தடுத்து ஆலோசனை யில் ஈடுபட்டனர். அப் பல்லோ மருத்துவமனையின் சிறப்பு டாக்டர்கள் குழு அவரை தீவிரமாக கண் காணித்தது. இதற்கிடையே நள்ளிர வில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இதய நாளங்களில் ஆய்வு செய் யப்பட்டது. அப்போது அவரது இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல் லும் ரத்தக் குழாய்களில் ஒரு ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது தெரிய வந்தது.

    அந்த ரத்தக் குழாய் அடைப்பை எப்படி நீக்குவது என்று டாக்டர்கள் குழு தீவிர ஆலோசனை நடத்தியது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் மற்றும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களுடன் இதுகுறித்து மீண்டும் ஆலோசனை நடத் தப்பட்டது.

    நீண்ட ஆலோசனைக்குப் பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு “ஆஞ்ஜியோ” சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு “ஆஞ்ஜியோ” சிகிச்சை நடந்தது.

    அறுவை சிகிச்சை செய்யாமல் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரத்தக் குழாய் அடைப்பு நீக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் ஆஞ்ஜியோ சிகிச்சை நடந்ததாக கூறப்படுகிறது.
    இந்த சிகிச்சை முடிந்த பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    முதலமைச்சருக்கு சுவாசம், இதய செயல்பாடு உதவிக்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது  24 மணி நேரத்திற்கு பின்னரே, அதன் தாக்கத்தை உணர முடியும்.ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது அப்பல்லோ மருத்துவமனை தகவல்  அப்பலோ மருத்துவமனை தனது புதிய அறிக்கையில் கூறபட்டு உள்ளது.

    No comments: