எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கு, இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்நிலையில், பார்லிமென்டில், லோக்சபா உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, மத்திய சுகாதார துறை இணை அமைச்சர், அனுப்ரியா படேல் அளித்த பதில்: மாநில அரசுகளின் கருத்துகளுக்கு ஏற்ப, அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும், தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும். 'நீட்' தேர்வுப்படி, மாநில கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் குறுக்கீடு இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment