வர்தா புயல் காரணமாக சென்னையிலிருந்து இயக்கப்படும் 17 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்து அறிவித்துள்ளதால் பயணிகள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை: வர்தா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
வர்தா புயல் காரணமாக சென்னையில், பெரும் காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இதனால் நகரமெங்கும் தெருவுக்கு ஒரு மரம் என்ற வீதத்தில் கணக்கில் அடங்காத மரங்கள் சாய்ந்தும், முறிந்தும் கிடக்கிறது.
சென்னை சென்டிரல், எழும்பூர் ரயில் நிலைய தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கீழ்கண்ட 17 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
ரயில் எண் 22637- சென்னை சென்ட்ரல்-மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 56001-சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் பேசஞ்சர்
ரயில் எண் 12609-சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆர் பெங்களூர் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12712-சென்னை சென்ட்ரல்-விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 16053-சென்னை சென்ட்ரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12679-சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12695-சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12607-சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆர் பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 52739-சென்னை சென்ட்ரல்-குடூர் பேசஞ்சர்
ரயில் எண் 22860-சென்னை சென்ட்ரல்-பூரி வாராந்திர எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 16203-சென்னை சென்ட்ரல்-திருப்பதி கருடாத்திரி எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12603 சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12685 சென்னை சென்ட்ரல்-மங்களூர் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 11042 சென்னை எழும்பூர்- சிஎஸ்டிஎம் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12635 சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12605 சென்னை எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 16105 சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்
இந்தரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல பல்வேறு நகரங்களிலிருந்து சென்னை வழியாக இயக்கப்படும் ரயில்கள் காட்பாடி வழியாக சென்னைக்குள் இயங்கப்படாமல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
மதுரை, பெங்களூரிலிருந்து வேறு மாநிலங்களுக்கு சென்னை வழியாக செல்லும் ரயில்கள் இவ்வாறு மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment