ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை செவ்வாய் கிழமை அதிகாலை 1 மணிக்கு பதவி ஏற்றது. ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களும் அதே இலாகா பொறுப்புடன் பதவியேற்று கொண்டனர்.
முன்னதாக, திங்கட்கிழமை மாலை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமையகத்தில் மதுசூதனன் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை அ.தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், இன்று அதிகாலை 1 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடந்தது. தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். அவரை தொடர்ந்து 31 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய அமைச்சரவை விவரம்:
1. ஓ.பன்னீர் செல்வம் - பொது நிர்வாகம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்துறை
2. திண்டுக்கல் சீனிவாசன் - வனத் துறை
3. எடப்பாடி பழனிச்சாமி - பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை துறை
3. செல்லுார் ராஜூ - கூட்டுறவுத் துறை
4. தங்க மணி - மின்சாரம், மதுவிலக்குத் துறை
5.வேலு மணி - நகர வளர்ச்சி துறை
6.ஜெயகுமார் - மீன்வளத் துறை
7.சண்முகம் - சட்டத்துறை
8.அன்பழகன் - உயர்கல்வி துறை
9.சரோஜா - சமூக நலன், சத்துணவுத் துறை
10. எம்.சி. சம்பத் - தொழில் துறை
11. கருப்பணன் - சுற்றுச்சூழல் துறை
12காமராஜ் - உணவுத் துறை
13. ஓ.எஸ்.மணியன் - கைத்தறித் துறை
14. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி வாரியத் துறை
15. விஜய பாஸ்கர் - சுகாதாரத் துறை
16. துரைகண்ணு - வேளாண் துறை
17. கடம்பூர் ராஜூ - தகவல் மற்றும் செய்தி தொடர்பு துறை
18. ஆர்.பி. உதயகுமார் - வருவாய் துறை
19. வேலுமணி - நகர வளர்ச்சி துறை
20. வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலா துறை
21. மஃபா பாண்டியராஜன் - பள்ளி கல்வித் துறை
22. ராஜேந்திர பாலாஜி - பால்வளத் துறை
23. பென்ஜமின் - ஊரக வளர்ச்சி துறை
24. விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை
25. நிலோபர் கபில் - தொழிலாளர் நலத் துறை
26. மணிகண்டன் - தகவல் தொடர்பு துறை
27. ராஜலெட்சுமி - ஆதி திராவிடர் நலத் துறை
28. பாஸ்கர் - கதர் துறை
29. வீரமணி - வணிக வரித் துறை
30. சேவூர் ராமச்சந்திரன் - இந்து சமய அறநிலையத் துறை
31. வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
32. பால கிருஷண ரெட்டி - கால்நடை துறை.
No comments:
Post a Comment