பெருமதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கை காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 2 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கை காரணமாக அடுத்த ஆறு மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என்று சில பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். ஆனால், என்னைப் பொருத்தவரை அடுத்த ஆறு மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் அதிகரிக்கும்.
பொருளாதார நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது. எனினும், எல்லா பணப் பரிவர்த்தனைகளும் பொருளாதார நடவடிக்கைகளாகக் கருதப்படுவதில்லை.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, பொருளாதார நடவடிக்கையாகக் கருதப்படும் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதமும் அதிகரிக்கும் என்றார் அவர்.
No comments:
Post a Comment