வட கிழக்கு பருவ மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தீபாவளிக்குப் பின், 10 வேலை நாட்கள், பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. வரும் 23 முதல், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.
கடந்த ஒன்றரை மாதத்தில், 20 நாட்கள் மட்டுமே, பள்ளி, கல்லுாரிகளில் பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. மற்ற நாட்களில், பண்டிகை விடுமுறை, மழை விடுமுறை விடப்பட்டு விட்டது. இதனால், பெரும்பாலான பாடங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை.
இதனால், பாடங்களை முடிக்க ஆசிரியர்கள், கல்வித் துறையினர் திட்டமிட்டுள்ளதாவது:
* மழைக்காக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில், பள்ளிகளுக்கு, மதிய இடைவேளை நேரத்தைக் குறைத்து; மாலை நேரத்தில், கூடுதல் நேர பாடப்பிரிவு ஒதுக்கி பாடங்கள் நடத்தப்படும்
* சனிக்கிழமைகளில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பள்ளிகள் முழு நேரம் இயக்கப்படும்.
* மழையால், கல்லுாரிகளில் தேர்வுகள் ரத்தாகி உள்ளதால், தேர்வு நாட்களை குறைத்து, மற்ற நாட்களில், கூடுதல் பாட வேளைகள் ஏற்படுத்தப்படும்.
No comments:
Post a Comment