தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் தொகுதி செயல் அலுவலர் நிலை 3 மற்றும் செயல் அலுவலர், நிலை 4 ஆகிய பதவிகளுக்கான 2014 & 2015, 2015 & 16 மற்றும் 2016 & 17-ஆம் ஆண்டுகளுக்குரிய விளம்பர அறிக்கைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர். செயல் அலுவலர், நிலை 3-இல் 29 பேரும், செயல் அலுவலர், நிலை 4-இல் 49 பணியிடங்களும் பூர்த்தி செய்யப்பட உள்ளன. செயல் அலுவலர், நிலை 3க்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சியும், செயல் அலுவலர், நிலை 4க்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி இரு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க 24.12.2016 கடைசி நாள் ஆகும்.
செயல் அலுவலர், நிலை 3க்கான எழுத்து தேர்வு இரு தாள்களைக் கொண்டது. இவை 29.04.2017 அன்று காலை மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது. செயல் அலுவலர், நிலை 4க்கான இரு தாள்களைக் கொண்டது. இவை 30.4.2017 அன்று காலை மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது.
இதற்கான தேர்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக 100 +50 = 150 ரூபாய் செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று, இரண்டு முறை தேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கெனவே பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளோ எழ வாய்ப்புள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது. இது குறித்த சந்தேகங்களை 04425332855, 04425332833 மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண்: 18004251002ல் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_22_not_eng_eo_gr_iv_viii_services1.pdf என்ற இணையதள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment