ஆதிதிராவிட பள்ளிகளுக்கு, அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. தமிழகத்தில், 1,134 ஆதிதிராவிட பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 1.15 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 18 மாவட்டங்களில் உள்ள, 48 பள்ளிகளுக்கு, கூடுதல் வகுப்பறைகள், கட்டடம், ஆய்வகம், கழிப்பறை, குடிநீர் வசதிகள் மற்றும் ஐந்து விடுதிகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதற்கான, 'டெண்டர்' நேற்று வெளியிடப்பட்டது. 'இம்மாத இறுதியில், டெண்டர் முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment