மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், வாடிக்கையாளர்கள், 24 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க அனுமதிக்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 24ம் தேதி வரை, வாடிக்கையாளர்கள், அவர்களது கணக்கில் இருந்து, 24 ஆயிரம் ரூபாய் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
எனினும், பழைய செல்லாத, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, வாடிக்கையாளர்கள் கணக்கில் அனுமதிக்கக் கூடாது. அந்த செல்லாத நோட்டுகளை பெற்று, புதிய நோட்டுகளை தரக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment