குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் அறிவியல் மற்றும் கணித பெட்டகம் (Science Kit, Maths Kit) வழங்கப்படும். மேலும், இன்றிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த 1 முதல் 9ம் வகுப்பு வரையில் பயிற்சித் தாள்(Work Sheet) பள்ளிகளுக்கு தினமும் இணைய தளம் மூலம் அனுப்பப்படும்.
அதன் மூலம் அந்த மாணவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்படும். இந்த பயிற்சித் தாளில் 10 கேள்விகள் இடம் பெறும். இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி(All Pass) என்பது தொடரும்.
No comments:
Post a Comment