Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 22, 2013

    சம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம் அலைய வைக்காத அஞ்சலக சேமிப்பு!

    மாதச் சம்பளம் வாங்குகிறவர்களில் பலர் வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலோ ஆர்.டி. போன்ற திட்டங்களில் சேர்ந்துதான் சிறுக சிறுக சேமித்து வருகிறார்கள். இப்படி சேமிக்கும்போது ஒவ்வொரு மாதமும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லவேண்டும்.
    ஆனால், தபால் அலுவலகம் செல்லாமலே அதில் கிடைக்கும் வருமானம் மற்றும் வசதியை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் தபால் அலுவலகத்திலுள்ள சம்பள பட்டியல் சேமிப்பு (payroll saving scheme) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    அது என்ன சம்பள பட்டியல் சேமிப்பு வசதி? இது யாருக்கானது?, இந்த முறையில் எப்படி சேமிப்புக் கணக்கைத் தொடங்குவது?, வட்டி எவ்வளவு? என பல விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார் தென்மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர். அவர் தந்த விவரங்கள் இதோ:

    சிறப்பு வசதி!

    ''ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஆர்.டி. (Recurring Deposits), டி.டி. (Time Deposits), தேசிய சேமிப்பு பத்திரம் (NSCs) மற்றும் பி.பி.எஃப். (PPF) போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கான சிறப்பு வசதிதான் சம்பள பட்டியல் சேமிப்பு. இந்த வசதியை சம்பளதாரர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். ஆனால், தனிநபராக இதில் சேரமுடியாது. நிறுவன பணியாளர்கள் பலர் சேர்ந்துதான் இம்முறையில் சேமிப்பை ஆரம்பிக்க முடியும்.

    இந்த முறையில் தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க வயது வரம்பு இல்லை. சம்பளதாரராக இருந்தால்போதும். தனிநபர்கள், தபால் அலுவலகத்தில் ஆர்.டி., டைம் டெபாசிட் (டி.டி). போன்ற சேமிப்பு கணக்கை ஆரம்பித்து, மாதந்தோறும் பணம் செலுத்த தபால் அலுவலகம் செல்வது வழக்கம். இதனால் நேரம் மற்றும் போக்குவரத்துக்காக செலவிடும் தொகை வீணாகிறது.

    ஆனால், சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பை மேற்கொள்ளும்போது பணத்தைப்போலவே நேரமும், உழைப்பும் சேமிக்கப்படுகிறது. அதுதவிர, இத்திட்டத்தில் சேர்ந்திருக்கும் நிறுவனத்துக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது.

    1 comment:

    KALVI said...

    நன்றி!