Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, November 28, 2013

    அரசு பள்ளிகளில் 2000 தமிழாசிரியர்கள் இல்லை

    அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் 2700, மேனிலைப் பள்ளிகள் 2800 இயங்கி வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்து பொதுத் தேர்வு எழுத உள்ளனர். ஆனால் இப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், இரண்டு விதமான அரசு உத்தரவுகள் இருப்பதை காரணம் காட்டி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இடங்களை நிரப்பாமல் உள்ளனர்.

    உயர்நிலை மேனிலை பள்ளிகளில் உள்ள வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு பாட ஆசிரியர் வீதம் நியமிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களை பொருத்தவரை ஆங்கிலத்துக்கு தனியாக ஆசிரியர் நியமிக்க வேண்டும். அதேசமயம் தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது குழப்பங்களை அதிகாரிகள் செய்து வருவதாக தமிழாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

    பதவி உயர்வு மூலம் தமிழாசிரியர்கள் நியமிக்கும் போது, 1988ல் போடப்பட்ட அரசு உத்தரவு 686ல் கூறப்பட்ட அம்சங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழாசிரியர்கள் கேட்கின்றனர். அதன்படி பி.டி ஆசியர்களுக்கு பதவி  உயர்வு வழங்கும் போது, பணியில் சேர்ந்த காலத்தை பணி மூப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதைப்பின்பற்றி அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 

    ஆனால் பிடி தமிழாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது மட்டும் 2007ல் போடப்பட்ட அரசு உத்தரவு 161ஐ காரணம் காட்டி பதவி உயர்வு வழங்க மறுப்பதாக தமிழாசிரியர்கள் கூறுகின்றனர். 161 அரசு உத்தரப்படி பி.எட் அல்லது பி.லிட் முடித்திருந்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும்  அல்லது நேரடியாக தமிழாசிரியர் பணி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. இதனால் உயர்நிலைப் பள்ளிகளில் 1200 தமிழாசிரியர் பணியிடங்களும், மேனிலைப் பள்ளிகளில் 600 தமிழாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. 

    இந்த பிரச்னை குறித்து தமிழாசிரியர்கள் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் பயன் இல்லாமல் போனதால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து பிரிவுகளிலும் பதவி உயர்வு மற்றும் நேரடி பணி நியமனம் என (தமிழாசிரியர்கள் உள்பட) 13450 ஆசிரியர் பணியிடங்கள் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ளன. குறிப்பாக மொழிப்பாடத்தில் தமிழாசிரியர்கள் இல்லாமல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு தமிழாசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    No comments: