Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, November 23, 2013

    இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைத் தீர்க்குமா இந்த டிடோஜாக் போராட்டம் ??? ஏமாற்றம் தரும் டிட்டோ ஜாக் தீர்மானங்கள்

    ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என விரும்பிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுள் நானும் ஒருவன். இந்த விருப்பம் நிறைவேறியதில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். இரண்டு அம்ச கோரிக்கையை மையப்படுத்தி ஒரு மிகப்பெரிய போராட்டம் நிகழப்போகிறது என்ற அளவில்லா சந்தோசத்துடன் டிட்டோ ஜாக் கூட்டம் 9ந் தேதி நிறைவடைந்தது. 


    20.11.2013 ஆவலுடன் காத்திருக்கிறேன்..... முதல் அமர்வில் மாவட்ட அளவிலான அமைப்பை ஏற்படுத்துவது என முடிவாற்றப்பட்ட என்ற செய்தி சரியான திசையை நோக்கி டிட்டோ ஜாக் நகர்கிறது என்பது புரிந்தது. ஆனால் மாலையில் நடந்த இரண்டாம் அமர்வில் இரண்டு அம்ச கோரிக்கைகளுக்கு பதிலாக 7 அம்ச கோரிக்கை என்பது என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டது. இதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அதை ஏற்க மனது வரவில்லை. அனைவருக்கும் ஏற்ற கோரிக்கை இருந்தால்தான் எல்லாரையும் ஈர்க்க முடியும் என்பது ஏற்றுக்கொள்ள இயலவில்லை. 

    சங்கவாதி என்பவன் யாருக்கு பாதிப்போ அவனுக்காக களத்தில் இறங்க வேண்டும் என்பதை இலட்சியமாக கொள்ள வேண்டும். அதற்காக அனைவரையும் தயார்படுத்த வேண்டும். இந்த 7அம்ச கோரிக்கைகளில் மிகப்பெரிய ஆபத்து நிறைந்துள்ளது. அரசாங்கம் இந்த கோரிக்கைகளில் எளிதான இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தன்னுடைய ஜனநாயக கடமையை முடித்துக்கொண்டால் இந்த 7 இயக்கங்களில் பாதி போராட்டக்களத்தில் கடைசி வரை நிக்குமா?. நான் இந்த வினாவை ஒரு  ஆசிரியராக இருந்து கேட்கின்றேன். இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதர கோரிக்கை கிடப்பில் போடப்பட்டால் என்ன செய்வது? ஏன் இந்த நிலை மாற்றம்.  இயக்க தலைவர்கள் சற்று சிந்திக்க பணிந்து வேண்டுகிறேன். 

    இது இயக்க தலைமைகளை விமர்சதிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எண்ணற்ற இடைநிலை ஆசிரியர்களின் மனதில் தோன்றுகின்ற வினாவாகத்தான் நான் இதை பார்க்கின்றேன். இன்றை நிலையில் களத்தில் சூடாக இருக்கின்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமாற்ற பிரச்சனைளை கையிலெடுத்து போரட்டக்களத்தில் வீராவேசத்துடன் போராடினால் நிச்சயம் நாம் வென்றெடுக்கலாம். அதை விடுத்து மற்ற கோரிக்கைகளை இத்துடன் இனைத்து போராடுவது என்பது முதன்மை கோரிக்கையின் வலிமை ஆளும் அரசுக்கு புரியாமல் போய்விடும். 7 அம்ச கோரிக்கை என்பது இடைநிலை ஆசிரயர்களை மீண்டும் ஏமாற்ற களத்திற்கு இட்டுச்செல்லும் அபாயம் உள்ளது.  என்னுடைய கருத்தை சொல்வதற்று எனக்கு உரிமை உண்டு என்பதால் இதை பதிவிடுகிறேன். எங்கள் இயக்க பொதுச்செயலாளருக்கும் என்னுடைய அதிருப்தியை அலைபேசி வாயிலாக பதிவு செய்துள்ளேன். இது என்னுடைய தனிப்பட்ட பதிவு மட்டுமே. இது எந்த விதத்திலும் என்னுடைய மாவட்டக்கிளையை கட்டுப்படுத்தாது. எது எப்படி இருந்தாலும் என் இயக்க தலைமை எனக்கு இடும் கட்டளையை என் சிரமேற்கொண்டு நிறைவேற்ற தயாராகவே உள்ளேன். வருகிற திசம்பர் 4ந் தேதி மாவட்ட அமைப்பு கூட்டத்தை எதிர்நோக்கி என் கவனத்தை திசை திருப்பியுள்ளேன். எங்கள் மாவட்டத்திற்கு மாவட்ட தொடர்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அவர்களோடு இணைந்து களப்பணியாற்றும் நாளை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளேன். கோரிக்கைகள் வென்றெடுக்கு கோடிக்கைகள் இணையட்டும். இறுதி வெற்றி நமதே!

    2 comments:

    IDAINILAI ASIRIYAR said...

    கால காலமாக இது இடை நிைலை ஆசிாரயா்களை ஏமாற்றும் யுக்தி தான் இந்த பல கோரிக்கைகள்
    இடைநிலை ஆசிரியராக இருக்கும் ஆிரியரால் மட்டுமே உண்மையாக நமக்காக போராட முடியும் போட்டி டிட்டோஐாக் அதை கண்டிப்பாக முன்னடத்தி வெற்றி பெறும்

    Anonymous said...

    இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்திற்கான போராட்டம் மிக முக்கியமானது.ஆறாவது ஊதியக் குழுவால் பாதிக்கப்பட்டுள்ளது இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே அல்ல. இடைநிலை ஆசிரியர்களாக இருந்து பதவி உயர்வில் சென்றுள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரி மற்றும் பட்டதாரி தலைமைஆசிரியர்களும் தான் என்பது இன்னும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தெரியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள அவர்களின் கோரிக்கைகளுக்காக இப்போது போராடாமல் இனி எப்போது போராட முடியும்?