பருவமழை ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, பள்ளிகளுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பில் ஆய்வு அலுவலர்கள், ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்பள்ளி வளாகத்தில் நீர் தேங்கும் கிணறு, பள்ளம், கழிவுநீர் தொட்டியை மூடி வைக்க வேண்டும்.
மழையின் போது மரங்களின் கீழ் ஒதுங்க வேண்டாம்; இடி, மின்னல்களால் ஆபத்து ஏற்படும். விழும் நிலையிலுள்ள மரங்களை, உடனே அப்புறப்படுத்த வேண்டும் பள்ளிக்கு வரும் வழியில், வெள்ளம் வரும் ஆறு, குளங்கள் இருந்தால், அந்த வழியைத் தவிர்க்க வேண்டும்; ஆறு, ஏரி, குளங்களில் குளிப்பதைத் தவிர்க்கவும்பழுதான கட்டடம், அறிவியல் ஆய்வகங்கள், கணினி அறையிலுள்ள அறுந்த ஒயர்களை அப்புறப்படுத்த, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மின் சாதனங்களை இயக்க, மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது .
பள்ளி மேற்கூரைகளில் பழுது இல்லாமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் பள்ளி வளாகம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில், அறுந்த மின்னழுத்தக் கம்பிகளை அகற்ற வேண்டும்; மாணவர்கள் அவற்றைத் தொடக்கூடாது மழையால் வேகமாக பரவும், சிக்-குன் குனியா, டெங்கு நோய்களை தவிர்க்க, மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
'இத்தகைய அறிவுரைகளை, பள்ளிகள் எப்படி மாணவரிடையே பிரகடனப்படுத்தப் போகின்றன என்கிற வழிமுறை குறித்து, தெளிவான விளக்கம் தர வேண்டும்' என்ற தொடர் கண்காணிப்புத் தகவலை, இயக்குனர் கேட்டுப் பெறவில்லை. அப்படிக் கேட்டுப் பெற்று, அது சரியாக நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பதையும் கண்காணித்தால் மட்டுமே, இந்த அறிவுரைகளின் பயன், மாணவர்களை சென்றடையும்; ஆபத்துக்களையும் தவிர்க்க முடியும்.
No comments:
Post a Comment