சித்த மருத்துவ படிப்புகளுக்கு, கூடுதலாக, 99 இடங்கள் கிடைத்ததால், கலந்தாய்வு இரவு வரை நீடித்தது. தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவ கல்லுாரி கள், 21 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, 1,099 இந்திய மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன.
இதற்கான கலந்தாய்வு, 25 முதல் நடந்து வருகிறது. மூன்று நாட்களில், 1,020 இடங்கள் நிரம்பின; 79 இடங்கள் மீதம் இருந்தன. சுப்ரீம் கோர்ட் அனுமதியின்படி, 99 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, 178 இடங்களுக்கு, நேற்று கலந்தாய்வு நடந்தது.
சில இடங்கள் மறைக்கப்பட்டதாக சலசலப்பு ஏற்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது. 1,500 பேர் வரை குவிந்ததால், கலந்தாய்வு இரவு, 10:00 மணிக்கும் மேல் நீடித்தது.
No comments:
Post a Comment