Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, October 11, 2015

    அரசு ஊழியர்களின் பணி ஆண்டுதோறும் ஆய்வு

    ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க, அரசு ஊழியர்களின் பணி ஆவணங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய, அனைத்து துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:மத்திய அரசின், பல்வேறு துறைகளில், 50 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், பணியாற்றுகின்றனர். இவர்கள், ஓய்வு பெறும் போது, அவர்களின் பணி ஆவணத்தில் ஏற்படும் குளறுபடியால், அவர்களுக்கு, ஓய்வூதிய பலன்கள் பெறுவதில், காலதாமதம் ஏற்படுகிறது. 

    இதை தவிர்க்க, பணியாளர்களின் பணி ஆவணங்கள், ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படவேண்டும். ஆவணத்தில் ஏதாவது தவறு இருந்தால், அது பற்றி, சம்பந்தப்பட்ட ஊழியருக்கும், துறையின் தலைமைக்கும் தெரிவித்து தீர்வு காணப்பட வேண்டும். இதை, குறிப்பிட்ட காலவரைக்குள், செய்து முடிக்க வேண்டும். அப்போது தான், ஓய்வு பெறும் போது, அதன் பலன்களை பெறுவதில், சம்பந்தப்பட்ட ஊழியருக்கு, எந்த தாமதமும் ஏற்படாது. இவ்வாறு, உத்தரவில், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், கூறியுள்ளது.

    No comments: