Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, October 16, 2015

    பதவி உயர்வு எப்போது? முதுநிலை ஆசிரியர்கள் தவிப்பு

    முதுகலை பட்டம் பெற்றுள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களால், 20 ஆண்டுக்குப் பின்னரே, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடிகிறது. அதுவும், பணிமூப்பு அடிப்படையில் தான் கிடைக்கிறது. சீனியாரிட்டி இல்லாதவர், ஓய்வு பெறும் வரை, முதுநிலை பட்டதாரி ஆசிரியராகத் தான் இருக்க வேண்டும்.

    இந்த வேறுபாட்டால், பட்டதாரியாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில், அவர்களை விட அதிகமாக படித்துள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றும் நிலை ஏற்படுகிறது; ஊக்க ஊதியத்திலும் முரண்பாடு இருக்கிறது.

    இந்த வேறுபாடுக்கு காரணமான, அரசாணையை மாற்றக் கோரி, முதுநிலை ஆசிரியர்கள், 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்; ஆனால், பிரச்னை தீர்க்கப்படவில்லை. இந்த கோரிக்கையையே, அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. 

    இதுகுறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் கூறுகையில், ''இந்தப் பிரச்னையை தீர்க்க, முன்னாள் இயக்குனர்கள் கருணாகரன் மற்றும் ஜெகநாதன் தலைமையில், இரண்டு கமிட்டிகளை, அரசு அமைத்தது. இதுவரை, அதன் அறிக்கையை வெளியிடாமல் கிடப்பில் வைத்துள்ளது,'' என்றார்.

    இந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,200 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கான, இடமாறுதல் கலந்தாய்வு, இன்று நடத்தப்படுகிறது. 

    இதில், 650 இடங்களை நிரப்ப அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பு இருப்பதால், முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் பங்கேற்க, ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர்.

    எனவே, காலியிடங்களை நிரப்ப, பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து, தொகுப்பூதியம் கொடுத்து, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

    3 ஆண்டுகளில்...
    அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், 10 ஆண்டுகளுக்கு பின், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். அதில், மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின், பணிமூப்புப்படி, மாவட்ட கல்வி அதிகாரி அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நியமிக்கப்படுகின்றனர். அதன்பின், மூன்று ஆண்டுகளில், முதன்மை கல்வி அதிகாரியாக முடியும்.

    1 comment:

    Unknown said...

    பொய் சொல்லாதீர்கள் 2001 ம் ஆண்டு தேர்வானவர்களுக்கே தற்போது பதவி உயர்வு வருகிறது அதுபோல 3 ஆண்டுகளில் மாவட்டகல்வி அலுவலர்பதவி பெறுகின்றனர் என்பதும் தவறான தகவல் அதிகம்படித்துள்ளீர்கள் என்றால் மாவட்ட ஆட்சியர் பதவி கேட்க வேண்டியது தானே அவர் இளநிலைபட்டம் மட்டுமே படித்துள்ளார் பொய் சொல்லியே தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் முட்டாளாக்காதீர்கள்