அரசு பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து, அரசுக்கு ஆலோசனை வழங்க, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள் இணைந்து, புதிய அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் இணைந்து, 'தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஓய்வுபெற்ற அலுவலர்கள்' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதன் தலைவர், ஓய்வுபெற்ற இயக்குனர் பழனிவேலு.
சுயநலத்துக்காக...இந்த அமைப்பின் கூட்டம், நேற்று முன்தினம், சென்னை மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைப்பின் இணைச் செயலர் சிவா.தமிழ்மணி கூறியதாவது:இந்த அமைப்பு, மாணவர் மற்றும் பள்ளிக்கல்வி நலன் சார்ந்து மட்டுமே செயல்படும்; எங்கள் சுயநலத்துக்காக துவங்கப்படவில்லை.
பரிந்துரைதமிழகத்தில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, அரசு மாணவர் தேர்ச்சியை உயர்த்த பாடுபடுவோம்.
சமச்சீர்க் கல்வி தரத்தை உயர்த்து வது தொடர்பாக, அரசுக்கு, பரிந்துரைகள் அளிப்போம். நுழைவுத் தேர்வு, 'கேட்' தேர்வு போன்றவற்றில், அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற, எந்த வகையான பயிற்சி தேவை என ஆய்வு செய்து, அதற்கான பரிந்துரைகளையும் அரசுக்கு அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment