Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, July 29, 2012

    டி.இ.டி. தேர்வு: வெளியிடப்பட்ட விடைகளால் குழப்பம்

    ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கீ ஆன்சரில் பதில்கள் குழப்பமாக உள்ளன.
    இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 12ல் தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான கீ ஆன்சர்களை டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. இதில், ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ள ஒரே கேள்விக்கு வெவ்வேறு பதில்கள் குறிப்பிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.
    உதாரணமாக, "சி' பிரிவில் ஆங்கிலம் பகுதியில் 78வது கேள்வியாக "அசெம்பிள்' வார்த்தைக்கு அர்த்தம் "மேணுபேக்சர்' என்றும், "டி' பிரிவில் 61வதாக இடம்பெற்றுள்ள இதே கேள்விக்கு "பிட்' என்றும் கீ ஆன்சரில் விடை குறிப்பிடப்பட்டுள்ளது.
    இதேபோல், ஆங்கிலத்தில் மட்டும், ஏ, பி, சி, டி பிரிவுகளில் பல கேள்விகளுக்கு விடைகள் வெவ்வேறாக தரப்பட்டுள்ளன. இதனால், எந்த "ஆன்சர்&' சரியானது என்று தெரியவில்லை என தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
    பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான, டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு விடைகள் ஏற்கனவே, இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதன் மீதான ஆட்சேபனைகளை, 30ம் தேதி வரை தெரிவிக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
    இந்நிலையில், இடைநிலை ஆசிரியருக்கான, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கான விடைகளையும் (கீ-ஆன்சர்), நேற்றிரவு, இணையதளத்தில்(http://trb.tn.nic.in/) வெளியிட்டது.
    விடைகள் மீதான ஆட்சேபனைகளை, ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.

    1 comment:

    Unknown said...

    வருங்கால ஆசிரியர்களே
    TRB வெளியிட்ட்டுள்ள TET I paper கீ ஆன்சரில் ENGLISH பகுதியில் ஒரே வினாவுக்கு C சீரியல் வினாதாளுக்கு ஒரு பதிலும் D சீரியல் வினாதாளுக்கு ஒரு பதிலும் வெளியிட்டுள்ளது. இது போல் ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட வினாக்களுக்கு குழப்பமான விடைகளை வெளியிட்டு TET முதல் தாள் எழுதியுள்ளோரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே உங்கள் மறுப்புகளை உடன் எழுதுவீர் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு.
    போன்: 044-28269968
    044-28229688
    பேக்ஸ்:044-28272455
    இமெயில்:trb.tn@nic.in