தான்தோன்றிமலை உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆசிரியர்கள் நேற்று மாலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின், கரூர் மாவட்ட செயலாளர் ரஞ்சித் தலைமையில், ஆசிரியர்கள் நேற்று மாலை, 5:45 மணிக்கு, தான்தோன்றிமலை உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் கூறுகையில், ’இடைநிலை ஆசிரியை மஹாராணி என்பவருக்கு, நான்கு மாத ஊதியம் மற்றும் போனஸ் வழங்க வேண்டும்’ என்றனர். உதவி தொடக்க கல்வி அலுவலர் ரமணியின் சமரசத்தில், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
No comments:
Post a Comment