தேர்தல் நடைமுறை பற்றிய பாடத்திட்டங்களை பள்ளிக்கூட நிலையிலேயே அறிமுகம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. நம் நாட்டில் 18 வயது முடிந் தவர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறுகின்றனர். இந்நிலை யில் வருங்கால வாக்காளர் களுக்கு (15 முதல் 17 வயதுக் குட்பட்டவர்கள்) தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான பாடத் திட்டத்தை பள்ளிக்கூட நிலையிலேயே அறிமுகம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்புகிறது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி ஒரு கடிதம் எழுதி இருந்தார்.
அதில், “தேர்தல் மற்றும் தேர்தல் நடைமுறை பற்றிய புத்தகத்தை தயாரித்து தருமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை (என்சிஇஆர்டி) கேட்டுக் கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பதிலில், “பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தை தயாரிக்கும் என்சிஇஆர்டி உடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் புதிய கல்விக் கொள்கையை வகுப்பது தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ளோம். எனவே, புதிய பாடதிட்டம் தயாரிக்கும்போது இந்த கோரிக்கை குறித்து கவனத்தில் கொள்ளப்படும்” என்று கூறியிருந்தார்.
ஆனால், அதுவரை காத்திருக்க முடியாது என்று கருதிய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி மத்திய அரசுக்கு இது தொடர்பாக மீண்டும் நினைவூட்டல் கடிதம் எழுதி உள்ளார். அதில், “இடைக்கால ஏற்பாடாக, தேர்தல் பற்றிய பாடப் புத்தகத்தை உடனடியாக தயாரித்து வழங்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
No comments:
Post a Comment