முதல்வராக இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்து மகப்பேறு உதவி உயர்வு, ஸ்கூட்டி வாங்க மானியம் போன்ற 5 முக்கிய பைல்களில் கையெழுத்து போட்டுள்ளார்.
ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் அமர்ந்து பச்சை நிற பேனாவில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டார்.
*முதல் கையெழுத்தாக உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவிகிதம் மானியம் அளிக்கும் திட்டத்தில் கையெழுத்து போட்டார். இந்த திட்டத்திற்கு அம்மா இரு சக்கர வாகனத்திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
*தொடர்ந்து மேலும் 500 மதுக்கடைகள் மூடல்,
*மகப்பேறு நிதியுதவித்திட்டம் 18000 ரூபாயாக உயர்வு,
*மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம்,
*வேலை வாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை இரு மடங்காக உயர்வு
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை உயர்வு
10ஆம் வகுப்பு தேர்சி பெறாதோருக்கான உதவித்தொகை 100-200ஆக உயர்வு
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கான உதவித்தொடிக 200 - 400ஆக அதிகரிப்பு
ஆகிய 5 பைல்களில் கையெழுத்து போட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
No comments:
Post a Comment