தனியார் பள்ளிகள், கல்வி கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், பெற்றோர் வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. புதிய மாணவர்களிடம், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல், சட்டவிரோதமாக நன்கொடை வசூலிக்கப்படுகிறது. &'எந்த பள்ளியும் நன்கொடை வசூலிக்கக் கூடாது&' என, கண்டிப்பான உத்தரவு இருந்தும், பள்ளிகளில், பல்வேறு பெயர்களில் நன்கொடை பெறப்படுகிறது. அத்துடன், வரும் கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தில், முதல் பருவத்திற்கான தொகையும் வசூலிக்கப்படுகிறது. இது, பல பள்ளிகளில், கடந்த ஆண்டை விட, பல மடங்கு அதிகமாக உள்ளது.
இது குறித்து, பெற்றோர் கூறியதாவது: தனியார் பள்ளிகளில் வரைமுறை இன்றி, கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து, அரசு அமைத்த கல்வி கட்டண கமிட்டியும் விசாரிக்கவில்லை. தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையும் கண்டு கொள்ளவில்லை. அதனால், பள்ளிகளின் நெருக்கடிக்கு பயந்து, கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி, கல்வி கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment