கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6000க்கும் அதிகமான ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டில்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க செயல்பட்டுவரும் மத்திய அரசு, தரமான கல்விதான் நல்ல குடிமகனை உருவாக்கும் என நம்புவதாக ஜவடேகர் கூறினார்.
மேலும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தரமான கல்வியை வழங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கல்வியைப்போல் விளையாட்டும் மாணவர்களுக்கு முக்கியம் என்றும் வியர்வை சிந்தி விளையாடும் மாணவர்கள் சிறந்த மாணவர்களாக விளங்குவார்கள் என்றும் ஜவடேகர் தெரிவித்தார்.
மேலும் கேந்திரிய வித்யாலயாவில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்த ஜவடேகர், விரைவில் காலியான அந்த இடங்கள் நிரப்பப்படும் என்றார்.
No comments:
Post a Comment