சென்னை, மதுரை மற்றும் அண்ணா பல்கலைகளின் துணைவேந்தர்கள் குறித்து, இன்னும் இரு தினங்களில், கவர்னர் முடிவு எடுக்க உள்ளார்.
காமராஜர் பல்கலை.,
மதுரை காமராஜர் பல்கலையில், 2015 ஏப்., முதல், துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இதில், புதிய
துணைவேந்தரை நியமிக்க, பேராசிரியர் முருகதாஸ் தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, பல்கலை மானியக் குழுவின் பரிந்துரைப்படி, புதிய துணைவேந்தர் நியமன பணிகளை மேற்கொண்டு உள்ளது.
அண்ணா பல்கலை.,
அண்ணா பல்கலையில், 10 மாதங்களுக்கு மேலாக, துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை நியமிக்க, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலை.,
சென்னை பல்கலையில், ஓராண்டாக துணைவேந்தர் இல்லை. அங்கு புதிய துணைவேந்தரை நியமிக்க, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வேதநாராயணன் தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்களின் தலையீடு இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், மூன்று பல்கலைகளின் தேடல் குழுக்களும், இறுதி பட்டியலை தயார் செய்து விட்டன. வரும், 24ல், தமிழகம் வரும் கவர்னர், இறுதி முடிவு எடுப்பார் என, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment