Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 19, 2017

    நுழைவுத்தேர்வுகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி

    அரசு பள்ளிகளில், 8ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் துவங்கியுள்ளன. நுழைவுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. இதை சரி செய்யும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 


    மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் படி, 1,440 பள்ளிகளில், சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. இதற்காக, டில்லியைச் சேர்ந்த, பிரபல நிறுவனத்தின் புத்தகங்கள், தமிழக அரசு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு உள்ளன.

    இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவப் படிப்புக்கான, ’நீட்’ தேர்வு, இன்ஜி., படிப்புக்கான, ஜே.இ.இ., தேர்வு, கல்வி உதவித்தொகை பெற உதவும், தேசிய திறனாய்வு தேர்வு மற்றும் தேசிய ஊரக திறனாய்வு தேர்வுகளுக்கு, சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. 8ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், இதில் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    No comments: