Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 31, 2017

    ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு


    உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை ஜூன் 30-ந் தேதி வரை நீட்டித்து சட்டசபையில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டது.


    உள்ளாட்சி தேர்தல்

    தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 794 பதவி இடங்கள் உள்ளன.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதே மாதத்தில் 17 மற்றும் 19-ந் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

    தேர்தல் ரத்து

    ஆனால் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தது. மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டு டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதுவரை உள்ளாட்சி நிர்வாகிகளை நிர்வாகிக்க தனி அதிகாரிகளை நியமிக்கவும் உத்தரவிட்டது.

    தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசர சட்டத்தை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அக்டோபர் 17-ந் தேதி பிறப்பித்தார். டிசம்பர் 31-ந் தேதி வரை தனி அதிகாரிகள் அந்த பொறுப்பில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    பதவிக்காலம் நீட்டிப்பு

    இந்தநிலையில், டிசம்பர் 31-ந் தேதி உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவி காலத்தை 6 மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. இதற்கான உத்தரவை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்தார்.

    அந்த உத்தரவில், தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதத்திற்கு (ஜூன் 30-ந் தேதி வரை) நீட்டிக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்று கூறப்பட்டு இருந்தது. இந்த புதிய அரசாணை கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

    சட்ட முன்வடிவு

    அந்த சட்ட திருத்தத்திற்கான சட்ட முன்வடிவு சட்டசபையில் நேற்று கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், மாநகராட்சிகள், நகராட்சிகள் தொடர்பான சட்ட திருத்த சட்ட முன்வடிவுகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொண்டு வந்தார். சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சிகளின் தலைவர்களின் பதவிகளில் உள்ள சாதாரணமான காலியிடங்களை நிரப்பும் நோக்கத்திற்காக அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கிடையில் அரசின் அறிவிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு உத்தரவில் 2016 டிசம்பருக்கு முன்னதாக தேர்தலை நடத்தவும், தேர்தல் பணிகளை முடிக்கவும் புதிய அறிவிக்கை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தி இருந்தது. மேலும் தேர்தல் நடத்தும் வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை அமர்த்தவும் அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது.

    ஐகோர்ட்டின் உத்தரவின்படி, உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று முதல் கூட்டம் நடைபெறும் நாள் வரை அல்லது டிசம்பர் 31-ந் தேதி வரை இதில் எது முந்தியதோ அதுவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். அதன்படி தனி அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டனர். இதற்கான அவசரச்சட்டத்தை கவர்னர் பிறப்பித்தார்.

    விடைத்தாள் திருத்தும் பணி

    தமிழ்நாடு ஊராட்சிகள் தேர்தல் விதிகளின்படி, ஊராட்சி வாக்காளர் பட்டியலுக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் வாக்காளர் பட்டியல் அடிப்படையாக இருக்கிறது. வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க சீராய்வு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறக்கூடியதாக இருக்கும். சட்டமன்ற பேரவையின் வாக்காளர் பட்டியல்கள் பெறப்பட்டதன் பேரில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சாதாரணமான தேர்தல்களை நடத்தும் நோக்கத்திற்காக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட இயலும்.

    2017-ம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி மற்றும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு இடையில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு உள்ளடங்கலாக நடைபெறும் என்றும் பெரும்பாலான வாக்குப்பதிவு அலுவலர்கள் பள்ளிக்கல்வி துறையின் தேர்வு பணியினை பார்த்து கொண்டிருப்பர் என்றும் அதன் காரணமாக அவர்களை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக தேர்தல் பணிக்காக அமர்த்த முடியாது மற்றும் மிக பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் பணிகளுக்காக அமர்த்த முடியாது.

    மிக பெரும்பாலான பள்ளிகட்டிடங்கள் வாக்குசாவடியாக பயன்படுத்தப்படுகின்றன என்பதாலும் அவைகள் ஆண்டுத்தேர்வுக்கு பிறகு, 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி முடிவடைந்த பின்னரே கிடைக்க கூடியதாக இருக்கும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

    பதவிக்காலம்

    எனவே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதியன்று தனி அதிகாரிகளின் பதவிக்காலம் முடிவுறுவதை கருத்தில் கொண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அலுவல்களை நிர்வகிப்பதற்காக பொருத்தமான ஏற்பாடுகளை செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று கேட்டுக்கொண்டது. ஆகையால் 2017-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி வரை 6 மாதங்கள் மேலுமான கால அளவு ஒன்றிற்கு 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு அப்பால் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதென அரசு முடிவு செய்து இருக்கிறது.

    அதன்படி தனி அதிகாரிகளுக்கான பதவிக்காலத்தை மேலும் 6 மாதத்திற்கு ஜூன் 30-ந் தேதி வரையோ அல்லது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் சாதாரண தேர்தல் நடந்த பின்னர் கூடும் முதற்கூட்டம் நடைபெறும் வரை இவற்றில் எது முந்தியதோ, அதுவரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதற்கான ஊராட்சிகள் அவசர சட்டத்தை கவர்னர் பிறப்பித்து இருக்கிறார். தமிழ்நாடு அரசு சிறப்பிதழிலும் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் நடைபெறாததால் மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக அவசரச்சட்டம் பிறப்பிப்பது தேவையானதாக ஆயிற்று.  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த இந்த சட்டமுன்வடிவை தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

    இந்த சட்ட முன்வடிவு பிப்ரவரி 1-ந் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்படுகிறது.

    ஏப்ரலில் தேர்தல் இல்லை

    இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தபோது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், ‘உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் மாதத்திற்குள் நடத்த திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவித்து இருந்தார்.

    தற்போது சட்டசபையில் சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உருவாகி உள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

    No comments: