பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு அடுத்த இரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டிய ராஜன் அறிவித்திருக்கிறார். தகுதித் தேர்வு நடத்தும் தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 30,000 பேருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பதால், அவர்களைக் கொண்டே தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படும் என்றும், புதிதாக தகுதித் தேர்வு நடத்தப்படாது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார். அவர் கூறிய தகவல்கள் அறியாமையில் வெளிப்பட்டவை என்பதையும், ஆண்டுக்கு ஒரு முறை தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டியது சட்டப்படி கட்டாயம் என்பதையும் கடந்த 13-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஆதாரங்களுடன் விளக்கியிருந்தேன். அதை ஏற்றுக் கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன், தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். முந்தைய அமைச்சர்களைப் போல பிடிவாதம் பிடிக்காமல் தவறை ஒப்புக்கொண்டதுடன், அதை திருத்திக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாக அறிவித்திருப்பது நல்ல அறிகுறியாக தோன்றுகிறது.
அதேநேரத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் இழைக்கப்படும் சமூக அநீதி ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதால் மட்டும் தீர்ந்து விடாது. ஆசிரியர் தகுதித் தேர்வே சமூக நீதிக்கு எதிரானது; அத்தேர்வு ஒழிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பம் என்றார்.
No comments:
Post a Comment