மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், தொழில்நுட்ப கல்லுாரிகளில், வசதிகளை மேம்படுத்தவேண்டும் என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு, பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பதில்லை.
இவர்களுக்கான பயிற்சிக்கு, தொழில்நுட்ப கல்லுாரிகளில் போதிய வசதிகள் இல்லை என்று, பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொழில்நுட்ப கல்லுாரிகள் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், பாடவேளைகள் தவிர்த்து விளையாட்டு பிரிவுக்கும் நேரம் வழங்கி, ஊக்குவிக்க வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், மாணவர்கள்பங்கேற்பதை கல்லுாரி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment