மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், சிவகங்கை மாவட்டங்களில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
திண்டுக்கல்: ஜல்லிக்கட்டு போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டங்கள் மேலும் மேலும் வலுவடைந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போராட்டமாக உள்ளது. போர்க்களமாக தமிழகம் மாறியுள்ளது.
நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் நாளை ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் பள்ளிகளும் நாளை விடுமுறை அறிவித்துள்ளன.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ் ராவ் தெரிவித்துள்ளார்.
இதேபோல திண்டுக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வினய் விடுமுறை அறிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், திருப்பூர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். இதேபோல திருப்பூரிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை விடுமுறை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே தனியார் மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இப்போது அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு வருகின்றன.
No comments:
Post a Comment