நன்னெறி வகுப்பு நடத்துவது குறித்து, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான, கற்பித்தல் பயிற்சி வகுப்பு, ராஜவீதி, ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளியில், நேற்று நடந்தது. பள்ளிகளில் நன்னெறி வகுப்புக்கென, பிரத்யேக பாடத்திட்டம் இல்லை. அனைத்து வகுப்புகளிலும், இறுதி 10 நிமிடங்கள், பாடத்திட்ட கருத்துகளின் அடிப்படையில், பொதுநலன் சார்ந்த விஷயங்கள், எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுசார்ந்து, ஆறு முதல் எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், நடத்தி முடிக்கப்பட்டன. ஒன்பது, பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான, கற்பித்தல் பயிற்சிகள், நேற்று நடந்தன. இதை, ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் திருஞானசம்பந்தம் துவக்கி வைத்து, வகுப்பு நடத்தினார்.ஆசிரியர் பயிற்சி பள்ளி பேராசிரியர் இளங்கோ பேசுகையில், ''அனைத்து பாடங்களிலும், வாழ்க்கை கல்விக்கான கருத்துகள் இடம்பெற்றிருக்கும். அதை தொகுத்து, கதை வடிவில் கற்பிப்பது அவசியம். மனோதிடம், சுய ஆய்வு, சமநோக்கு, தேசிய உணர்வு உள்ளிட்ட, 20 தலைப்புகளில், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வகுப்பு நடத்துவது குறித்து, செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதால், பொதுநலன் சார்ந்த சிந்தனைகள் வளரும்,'' என்றார்.
No comments:
Post a Comment