Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, January 18, 2017

    தமிழக அரசு ஊழியர்கள் "கடவுச்சீட்டு" பெறுவதற்கான வழிமுறைகள் - முழு விளக்கங்கள்

    அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.


    அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, அனைத்துத் துறை  செயலாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பணியாளர்- நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் அனுப்பியுள்ள கடிதம்: அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் கடவுச்சீட்டுகளைப் பெற சில கடினமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நடைமுறைகளை எளிதாக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்வந்துள்ளது. கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அரசுத் துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பணி, தாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கும் அடையாளச் சான்று அல்லது அரசுத் துறைகளில் இருந்து ஆட்சேபணையின்மைச் சான்றினைச் சமர்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்தச் சான்றிதழ்களைப் பெறுவது கடினமாக இருப்பதால் இந்த நடைமுறை இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, அதுகுறித்த முன்னறிவிப்புக் கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசுத் துறை உயரதிகாரிக்குத் தெரிவித்தால் போதும். ஆட்சேபணை ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த உயரதிகாரி மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அதைத் தெரிவித்து கடவுச்சீட்டு விண்ணப்பத்தை திரும்பப் பெற்று விடலாம் என்று தனது கடிதத்தில் டேவிதார் தெரிவித்துள்ளார்.

    அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவது இனி ”ஈசி” - எளிதாக்கப்பட்ட புதிய நடைமுறை அறிமுகம்

    தமிழக அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும் முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
    இதுகுறித்து தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் டேவிதார் அனுப்பிய சுற்றறிக்கையில், "பாஸ்போர்ட்டுகளை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுத்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பெற்றுக்கொள்வதில் கடினமான நடைமுறை இருந்தது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது எளிதாக்கியுள்ளது.

    முன்பு பாஸ்போர்ட்டை அவர்கள் பெறவேண்டுமானால், அரசுத் துறையின் ஆட்சேபனையின்மைச் சான்று, அடையாளச் சான்று போன்றவற்றை வாங்கி சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

    அதன்படி, பாஸ்போர்ட் கேட்டு மண்டல அலுவலகத்திடம் விண்ணப்பிப்பதற்கு முன்பதாக, அவர் பணியாற்றும் துறையின் உயர் அதிகாரிக்கு முன்னறிவிப்பு கடிதத்தை கொடுத்தால் மட்டும் போதுமானது. அவருக்கு பாஸ்போர்ட் வழங்கக்கூடாது என்றால், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு துறையின் உயர் அதிகாரி கடிதம் மூலம் ஆட்சேபனைகளைத் தெரிவித்து, விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுவிடலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

    பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?
    ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா” Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..

    விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

    1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்?
    • ஆர்டினரி (Ordinary)
    • அப்பிசியல் (Official)
    • டிப்ளோமேட்டிக் (Diplomatic)
    • ஜம்போ (Jumbo) 
    என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்,Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

    2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன?
    பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன?
    இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல்(Tatkal).

    3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
    ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

    4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?
    முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.
    1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
    • ரேசன் கார்டு
    • பான் கார்ட

    No comments: