Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 10, 2017

    மாத சம்பளகாரர்களே.. பட்ஜெட் 2017 உங்களுக்கு ஒரு ஜாக்பாட்!!!

    பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், நாட்டின் வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கும் என்பதற்கான காரணங்களையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமின்றி மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் தயாரிப்பில் செய்து வரும் தவறுகளை நாம் ஏற்கனவே பார்த்தோம்.
    ஆனால் இந்தப் பட்ஜெட் 2017, மாத சம்பளகாரர்களுக்கு உண்மையிலேயே ஒரு ஜாக்பாட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல காலம் பொறந்தாச்சு.. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டில் அமல்படுத்தியது. அதன் மூலம் சாமாணியர்களுக்கு நல்ல காலம் பிறக்க போகிறது என்பது மட்டும் அல்லாமல் நிதியமைச்சர் அறிவிக்க உள்ள மத்திய பட்ஜெட் அறிக்கையில் மாத சம்பளகாரர்களுக்கு அதிகளவிலான வரிச் சலுகைகள், தளர்வுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் தெரிகிறது. 2014ஆம் ஆண்டுக்குப் பின் மேலும் வர்த்தகச் சந்தையில் 2014ஆம் ஆண்டுக்குப் பின் ஆவலுடன் எதிர்பார்க்கும் பட்ஜெட் அறிக்கையாகப் பட்ஜெட்2017 உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நாட்டில் (இந்தியாவில் மட்டும்) கருப்பு பணமும், கள்ள ரூபாய் நோட்டுகளை 80 சதவீதம் அளவிற்குப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் களையப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மக்களின் வாழ்வை மேம்படுத்து சில திட்டங்கள் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   வருமான வரி விதிப்பு அளவீடுகள் கடைசியாக மத்திய அரசு வருமான வரி விதிப்பு அளவீடுகளை மாற்றியது 2014-15ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையில். இதன் பின் தற்போது மத்திய நிதியமைச்சர் வருமான வரியை குறைக்கத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது. புதிய வரி விதிப்பு இந்நிலையில் சந்தை வல்லுனர்களின் கணிப்பு மற்றும் ஆய்வுகளின் படி தற்போது இருக்கும் 2.5 லட்சம் ரூபாய் அளவிலான வரியில்லா வருமான அளவுகளை 4 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தலாம் எனத் தெரிவித்துள்ளது. பழைய வரி விதிப்பு கடந்த 2 வருடமாக நடைமுறையில் இருக்கும் வருமான வரி விதிப்பு அளவுகள் இது. மூத்த குடிமக்கள் 60 வயது முதல் 80 வயதுடையவர்களுக்குத் தற்போது 3,00,000 வரையில் வரி விதிப்புக் கிடையாது. அதேபோல் 80 வயதை தாண்டியவர்களுக்கு 5,00,000 வரை வருமான வரி கிடையாது. பட்ஜெட் 2017 அறிக்கையில் அதன் அளவுகளை 4,00,000 மற்றும் 6,50,000 லட்சம் தத்தம் அளவுகளை மாற்ற உள்ளதாகத் தெரிகிறது.   கொடுப்பனவு மற்றும் சலுகைகள் மாத சம்பளகாரர்களுக்கு அளிக்கப்படும் கொடுப்பனவு மற்றும் சலுகைகள் அனைத்து பல வருடங்களுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனைத் தற்போது முழுமையாக மாற்றவும் நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிகிறது. குழந்தைகள் கல்வி மாத சம்பளக்காரர்களுக்குத் தற்போது குழந்தைகளுக்கான கல்வி கொடுப்பனவில் மாதம் 100 ரூபாய்/ஒரு குழந்தைக்கு வரை வரிச் சலுகை பெறலாம். 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இதன் அளவீடுகளை மாதம் 1,000 ரூபாய்/ஒரு குழந்தைக்கு வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மாத 5000 ரூபாய் conveyance allowance பிரிவில் தற்போது மாதமாதம் 1,600 ரூபாய் வரை சலுகை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை மாதம் 5,000 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டு வருகிறது நிதியமைச்சகம். மருத்துவச் செலவுகள் திரும்பப் பெறுதல் மாத சம்பளகாரர்களுக்கு மருத்துச் செலவு செய்ததைத் திரும்பப் பெற சலுகையின் கீழ் வருடம் 15,000 ரூபாய் அளவிற்குச் சலுகை அளிக்கப்படுகின்றது. அதனை 50,000 ரூபாயாக உயர்த்த உள்ளதாகத் தெரிகிறது.     வீட்டு வாடகை மெட்ரோ நகரங்கள் அல்லாத இடங்களில் மாத சம்பளகாரர்களுக்குத் தங்களுடைய வருமானத்தில் 40 சதவீதம் அளவிற்கு வீட்டு வாடகையின் கீழ் வரிச் சலுகை பெறலாம். தற்போது இதன் அளவீடுகளை 50 சதலவீதம் வரை உயர்த்தவும் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது.   விடுமுறை பயணக் கொடுப்பனவு இப்பிரிவின் கீழ் இந்தியாவிற்குள் மட்டுமே பயணம் செய்வதற்கு மட்டுமே கொடுப்பனவு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் அளவை வெளிநாடுகளுக்கு வரிவாக்கம் செய்யவும், வருடத்திற்கு 1,00,000 வரையில் வரிச் சலுகை அளிக்கவும் யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இது 4 வருடத்தில் 2 முறை மட்டுமே இச்சலுகையைப் பெற முடியும் எனக் கட்டுப்பாடுகள் வைக்கப்படுகிறது.   வீட்டுக் கடன் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் எனப் பிரதமரின் புத்தாண்டு நாள் பேச்சின் வாயிலாகத் தற்போது வீட்டு கடனுக்கு வருடத்திற்கு அளிக்க 2,00,000 ரூபாய் அளவிலான வரி சலுகையை 5,00,000 வரையில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிகிறது. 80சி மேலும் 80சி பிரிவின் கீழ் தற்போது வரிச் சலுகை பெறும் அளவுகள் 1,50,000 ரூபாய் மட்டுமே உள்ள நிலையில் இதனை 3,00,000 ரூபாய் வரை உயர்த்தவும் ஆலோசனை செய்யப்படு வருவதாகத் தெரிகிறது. பிற திட்டங்கள் மேலும் என்பிஎஸ், 80சிசிடி, ஈபிஎப் அல்லது பிபிஎப் போன்ற பல்வேறு திட்டங்களிலும் வருமான வரிச் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments: