முத்துக்கவுண்டன்புதுார் அரசு நடுநிலைப் பள்ளியில், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. சூலுார் அடுத்த, முத்துக்கவுண்டன்புதுார் அரசு நடுநிலைப்பள்ளியில், சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கத்தின் சார்பில், விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. மாணவர்களுக்கு விவேகானந்தர் குறித்து பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தன. மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.
பரிசளிப்பு விழாவில், பள்ளி தலைமையாசிரியை உமாதேவி வரவேற்றார். இளைஞர் சக்தி இயக்க தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். சொற்பொழிவாளர் பழனிசாமி பேசுகையில், ”சுவாமி விவேகானந்தர் கருத்துக்கள் எக்காலத்துக்கும் எல்லா வயதினருக்கும் பொருந்தக் கூடியது. நாம் நம் பலவீனத்தை முதலில் கண்டறிய வேண்டும்.
பின் அதை வெல்ல வேண்டும்,” என்றார். போட்டிகளில் வென்றவர்கள், பங்கேற்றவர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, விவேகானந்தரின் படங்கள், புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment