தமிழ்நாடு பாடநுால் கழக அலுவலகத்தில், முதல்வர் பன்னீரின் படத்தை புறக்கணித்து, சசிகலா படத்தை வைத்து, முன்னாள் அமைச்சர் வளர்மதி பொறுப்பேற்றார். தமிழ்நாடு பாடநுால் கழக தலைவராக, கல்வி யாளர்கள் அல்லது கல்வி அமைச்சர் களை நியமிப்பது வழக்கம். ஆனால், முன்னாள் அமைச்சர் வளர்மதி, தற்போது அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று நல்ல நேரம் பார்த்து, தன் பொறுப்பை ஏற்றார்.
பொறுப்பேற்கும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா ஆகியோரின் புகைப்படங்களை, தன் மேஜை மீது வைத்திருந்தார். முதல்வர் பன்னீர் செல்வத்தின் படம் இடம் பெறவில்லை.
வளர்மதியின் இந்தச் செயலுக்கு, பள்ளி கல்வித் துறையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசு துறைக்கு தொடர்புஇல்லாத, சசிகலாவின் புகைப் படத்தை, பாடநுால் கழக தலைவர் அலுவலகத்தில் வைத்தது வரம்பு மீறிய செயல் என, விமர்சித்துள்ளனர்.
இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
இதே நிலை நீடித்தால், ஒவ்வொரு அதிகாரியும், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு கட்சி தலை வரின் படத்தை அலுவலகத்தில் வைப்ப தோடு, அவர்களுக்கு சாதகமாக பணியாற்றும் நிலை வரும். ஜனநாயக ஆட்சி என்ற நிலை மாறி, குழப்பங்கள் அதிகரிக்கும். தலைமைச் செயலர் உடனே தலை யிட்டு,பாடநுால் கழகத்திலிருந்து, சசிகலா படத்தை அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர். எம்.ஜி.ஆர்., படம் இல்லை விசுவாசிகள் வேதனை
பொதுவாக அரசு அலுவலகங்களில், மாநில முதல்வர், நாட்டின் பிரதமர் படங்கள் வைக்கப் படும். முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை படங்கள் வைக்க, அரசாணைகள் உள்ளன. இதை மீறி, கட்சி தலைவர்கள், ஜாதி தலைவர்கள் படங்கள் பெறக்கூடாது.
தமிழ்நாடு பாடநுால் கழக அலுவலகத்தில், இந்த விதிகளை துாள் துாளாக்கி, ஒரு கட்சி யின் பொதுச்செயலர் படத்தை வைத்துள்ளனர். அதேநேரத்தில், எம்.ஜி.ஆரின் படம் வைக்கப் படாததால், அவரது உண்மையான விசுவாசி கள் வேதனை அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment