அரசு இன்ஜினியரிங் கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், காலியாக உள்ள, 192 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்து தேர்வு, 2016, அக்., 22ல் நடத்தப்பட்டது; 28 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இட ஒதுக்கீட்டு விதிகள், மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 19, 20ல், சென்னை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment