வன சீருடைப் பணியாளர் தேர்வின் வனவர், கள உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடற்தகுதி, நடைத்தேர்வில் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் தாற்காலிகப் பட்டியல் www.forests.tn.nic.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான குறிப்பாணை, விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தனித்தனியே பதிவஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடம், தேதி மற்றும் நேரத்தில், நேர்முகத் தேர்வில் தவறாது கலந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment