வறட்சி நிவாரணத்திற்காக, ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம், சென்னை பல்கலையில் நடந்தது.
அதில், அரசின் துயர் துடைக்கும் நடவடிக்கைக்கு உதவும் வகையில், அரசு ஊழியர், ஆசிரியர்கள், தங்களுடைய, ஒரு நாள் ஊதியத்தை வழங்குவது என, முடிவு செய்யப்பட்டதாக, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர், ஜெ.கணேசன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment