தமிழகத்தில் 2003 ஏப்.,1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ளது. இதில் 4.23 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த ஓய்வூதிய சந்தா, அரசு பங்கு தொகை என, மொத்தம் 9 ஆயிரம் கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பத்தினர், ஓய்வு பெற்றோர் பணம் பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இதையடுத்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 2016 சட்டசபைத் தேர்தலையொட்டி அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலாநாயர் தலைமையில் 5 பேர் வல்லுனர் குழுவை பிப்., 26 ல் அரசு அமைத்தது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சந்திக்காமலேயே அக்குழுவின் இயங்கும் காலம் ஜூன் 25 ல் முடிந்தது.
இப்பிரச்னை சட்டசபையில் எழுப்பப்பட்டதால், குழுவின் இயங்கும் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு அரசு நீட்டித்தது. உறுப்பினர்களாக இருந்த பார்த்தசாரதி, லலிதாசுப்ரமணியம் நீக்கப்பட்டு, சென்னை 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' நிறுவன பேராசிரியர் பிரிஜேஸ் சி. புரோகித் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இக்குழு செப்., 15, 16 மற்றும் செப்., 22 ல் அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளை சந்தித்தது.
அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் செப்., 26 ல் அக்குழுவின் இயங்கும் காலம் முடிந்தது. அறிக்கை தாக்கல் செய்யாததால் டிச., 25 வரை மேலும் 3 மாதங்களுக்கு வல்லுனர் குழு இயங்கும் காலத்தை அரசு நீட்டித்தது. தற்போதும் அக்குழுவின் இயங்கும் காலம் முடிந்தும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதனால் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து 4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஓய்வூதியத் திட்டத்தை வேண்டுமென்றே அரசு தாமதப்படுத்தி வருவதாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment