Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 17, 2017

    பகுதிநேர பயிற்றுநர்களுக்கு பொங்கல் போனஸ், ‘மே’ மாத நிலுவை தொகை, ஆண்டு ஊதியஉயர்வை, தமிழக அரசு வழங்க வேண்டி - பகுதிநேர பயிற்றுநர்கள் கோரிக்கை.

    சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு,ஆதரவு குரல் கொடுத்து, அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்குரிய சலுகைகளை பெற்றுத்தரநீதிமன்றங்கள், பத்திரிகைகள், அரசியல் கட்சிகள், அரசு ஊழியர் - ஆசிரியர்சங்கங்கள், உதவிட அனைவரும் வேண்டுகிறோம்.

    கோரிக்கைகள் சுருக்கம்:-

    1. பொங்கல் போனஸ் ( 5 வருட பண்டிகை போனஸ் ).
    2. ஐந்து வருட ’ மே ’ மாத நிலுவைத்தொகை – 51 கோடி.
    3. ஆண்டு வாரியான ஊதிய உயர்வு (2011-12, 2012-13, 2013-14, 2014-15,2015-16 & 2016-17).
    4. பணி நிரந்தரம் செய்ய துறை ரீதியான பரிந்துரை.
    5. பணியின்போது இறந்தவர்கள், 58 வயதை பூர்த்தி அடைந்து ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன்கள்.


    பணி நியமன விபரம்

    தமிழக அரசின் அரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை (சி2)நாள் 11.11.2011ன்படி16549 பகுதிநேரப் பயிற்றுநர்கள் ரூ.5000 தொகுப்பூதியத்தில் 2012ம் ஆண்டுமார்ச் மாதம் பணி நியமனம் செய்யப்பட்டனர். வாரம் 3 அரைநாள் பணி என மாதத்திற்கு12 அரைநாட்கள் பணிபுரிய உத்தரவிடப்பட்டது. ஆறு  முதல் எட்டு வகுப்புவரை 100மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஓவியக்கல்விக்கு 5253பயிற்றுநர்களும், உடல்நலம் மற்றும் உடற்கல்விக்கு 5392 பயிற்றுநர்களும், 5904தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளான கணினி, தையல், இசை, தோட்டக்கலை, வாழ்வியல்திறன், கட்டிடம் கட்டும் கல்விக்கு 5904 பயிற்றுநர்களும் தேர்வுசெய்யப்பட்டனர்.அரசாணை 186 பள்ளிக்கல்வித்துறை(அகஇ) நாள் 18.11.2014ன்படி ஏப்ரல் 2014முதல்ரூ.2000 உயர்த்தப்பட்டு ரூ.7000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.கோரிக்கைகளின் விரிவாக்கம்:-1. 2012ம் ஆண்டில் பணிநியமனம் செய்யப்பட்டதில் இருந்து தொடர்பணி செய்துவரும்பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு 2011-12, 2012-13, 2013-14, 2014-15, 2015-16& 2016-17 கல்வி ஆண்டுகளுக்கு இதுவரை ஒருமுறைகூட பண்டிக போனஸ்வழங்கப்படாமல் மறுக்கப்பட்டுவருகிறது. துறை ரீதியாக பரிந்துரை ஏதும்செய்யப்படவும் இல்லை. அரசும் சிறப்பு மிகை ஊதியம்கூட வழங்காமல் வருகிறது.

    1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  110 விதி எண் 110-ன் கீழ் 14வதுசட்டசபையில் முதல் கூட்டத்தொடரில் மறைந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்விஜெ.ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் கீழ்கண்டவாறு உள்ளது.“உண்மையான சீரான கல்வி என்பது பாடப் புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்அளிக்காமல் கல்வி இணைச்செயல்பாடுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இதன் அடிப்படையில், உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றிற்காகஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள்மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16549 பகுதிநேர ஆசிரியர் பணியிடம்ஏற்படுத்தப்படும். இதனால் இப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில்பயிலும் மாணவ, மாணவியர் பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 99கோடியே 29 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.”எனவே, 16549 X 5000 X 12  = 99,29,40,000 என்பது   16549 பகுதிநேரப்பயிற்றுநர்களுக்கு ஒரு ஆண்டிற்கு 12 மாதங்களுக்கான ஊதியத்தைக் கணக்கிட்டுஅறிவித்ததை நடைமுறைப்படுத்தி, கடந்த ஐந்து வருடமாக நிலுவையில் உள்ள மேமாதங்களின் தொகுப்பூதியத் தொகையான(ரூ.513019000) 51 கோடியே 30 லட்சத்து 19ஆயிரம் நிலுவைத்தொகையை பகுதிநேர பயிற்றுநர்களின் வங்கிக் கணக்கில் செலுத்ததுறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2. மத்திய அரசின் மனிதவள அமைச்சகத்தால் ஏப்ரல் 2014ல் நடந்த 210வது PABகூட்ட முடிவின்படி (Government of India Ministry of Human ResourceDevelopment Department of School Education and Literacy *** Minutes of the210th PAB meeting held on 03rd April, 2014 for approval of the Annual WorkPlan & Budget of Sarva Shiksha Abhiyan (SSA))அனைவருக்கும் கல்வி இயக்கத்தில்உள்ள அனைத்து தொகுப்பூதிய பணிகளுக்கும் 15%  ஊதிய உயர்வும் ,மேலும் அதன்பராமரிப்பு பணிகளுக்கு திட்ட மதிப்பீடு உயர்வும் வழங்கப்பட்டது. அதன்படிஅனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரிந்துவரும் Programmer, CivilEngineer, Accounts and Audit Manager, Data Entry Operators,Office Assistant,Consultants (State level) (officer cadre),Consultant(Clerical cadre), Sweepers, Driver,  MIS Co-Ordinator, BlockAccountant/VEC Accountant என அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் உள்ள அனைத்துவகையான பணிகளுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டபோது முதல் முறையாக பகுதிநேரபயிற்றுநர்களுக்கும் ஏப்ரல் 2014 முதல் ரூ.2000 உயர்த்தப்பட்டு ரூ7000/-வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வுவழங்கப்பட்டது.- உதாரணத்திற்கு ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் கணினிஇயக்குபவர்களுக்கு ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டுவருகிறது.         (RURAL DEVELOPEMENT AND PANCHAYAT RAJ (CGS.1)DEPARTMENT G.O.(Ms).No.71 Dated:20.06.2014 )- அரசால் நடத்தப்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான கடை பணியாளர்களுக்கு ஆண்டுவாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.எனவே, 2011-12, 2012-13, 2013-14, 2014-15, 2015-16& 2016-17 ஆண்டு வாரியாகRURAL DEVELOPEMENT AND PANCHAYAT RAJ (CGS.1) DEPARTMENT G.O.(Ms).No.71Dated:20.06.2014ன்படி வழங்கப்பட்டுள்ளதை பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கும்கணக்கிட்டு வழங்கி, நிலுவைத்தொகையின் அவரவர் வங்கிக் கணக்கில் வழங்க அரசுஅறிவிப்பை வெளியிட வேண்டும்.

    3. கல்வித்துறையில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஒப்பந்தமுறையில் பணியமர்த்தப்பட்ட கணினி பயிற்றுநர்கள் அனைவரும் பணி நிரந்தரம்செய்யப்பட்டுள்ளனர். மறைந்த முதல்வர் அவர்களால் காவல்துறையில்தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட காவல் நண்பர்கள் அனைவரும் அரசால்பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது ஊரகவளர்ச்சித் துறைவட்டார வளர்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரகவேலை உறுதித் திட்டகணினி இயக்குபவர்களுக்கு அரசு TNPSC மூலம் சிறப்பு தேர்வு வைத்து பணிநிரந்தரம்செய்யத் திட்டமிட்டுள்ளது. அதைப்போலவே ஒவ்வொரு துறையிலும் தினக்கூலி பணி,ஒப்பந்த பணி,  தொகுப்பூதிய பணி, மதிப்பூதிய பணி, பகுதிநேரப் பணிபுரிபவர்களைஅவ்வப்போது துறை ரீதியாக பரிந்துரை செய்து சிறப்பு காலமுறை ஊதியம்,பணிவரன்முறை, பணிநிரந்தரம் என அடுத்த முன்னேற்றமான நிலையை பெற்று வருகின்றனர்.எனவே, பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையிலோ அல்லதுஅனைவருக்கும் கல்வி இயக்கத்திலோ நிரந்தரப்பணி வழங்க வேண்டும்.

    4. ஆயிரம் கனவுகளோடு அரசுப் பணி ஆசையில் 2012-ம் ஆண்டு முதல் பகுதிநேரப்பயிற்றுநராக பணிபுரிந்து எதிர்பாரா விபத்து, உடல்நல குறைவால் பணியின்போதுஇறந்தவர்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே பணியில்சேர்ந்து 58 வயது பூர்த்தி அடைந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்மறுக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின்குடும்பங்களுக்கும், பணி ஓய்வில் சென்றவர்களுக்கும் உரிய பணப்பலன்களை வழங்கவேண்டும்.

    தீர்வு காண வேண்டிய பிற வேண்டுகோள்கள்

    1. மகளிர் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு விடுமுறையுடன் கூடிய மகப்பேறு காலவிடுப்பு அனுமதிக்கப்படவில்லை.

    1. பணி நியமனத்தின் போதும், பணி நிரவலின் போதும் தொலைதூரப் பள்ளிகளுக்குபணி ஒதுக்கீடு வழங்கப்பட்டவர்களுக்கு இதுவரை அருகில் பணிபுரிய வாய்ப்புகள்வழங்கப்படவில்லை.

    2. G.O.177ன்படி அதிகபட்சமாக ஒருவர் நான்கு பள்ளிகளில் பணிபுரிந்துஅதற்குரிய ஊதியத்தினை பெறலாம் என்றுள்ளதை இதுவரை அமுல்படுத்தவில்லை.

    3. G.O.186ன்படி அதிகபட்சமாக ஒருவர் இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்துஅதற்குரிய ஊதியத்தினை பெறலாம் என்றுள்ளதை இதுவரை அமுல்படுத்தவில்லை.

    4. G.O.186ன்படி 1380 பகுதிநேரப் பயிற்றுநர்கள் பணியிடம் காலிப் பணியிடமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. 1380 காலிப் பணியிடங்களை தற்போது பணிபுரிந்துவருபவர்களுக்கு கூடுதலாக வழங்க வேண்டும்.

    5. பாடப்புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. தேர்வுகளும் நடத்தப்படுவதும்இல்லை.

    6. அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, யூனியன் பிரதேசமான  ஹரியானவில் பகுதிநேரப்பயிற்றுநர்களுக்கு ரூபாய் 10000 மாதத்தொகுப்பூதியமும், மேலும் கோவா யூனியன்பிரதேசத்தில் ரூபாய் 15000 மாதத்தொகுப்பூதியமும் வழங்குவதை, தமிழத்தில்இன்றுவரை அமுல்படுத்தப்படவில்லை.

    7. 14வது சட்டசபையின் கடைசி கூட்டத்தொடருக்கு முன்பு ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் வழங்கக் கோரி வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டகல்லூரி விரிவுரையாளர்களுக்கு ரூ.5000 ஊதிய உயர்வும்,  செவிலியர்களுக்குபடிப்படியாக பணி நிரந்தரம் செய்ய அரசு ஒப்புக்கொண்டது.அதைப்போலவே பள்ளிகளை இழுத்து மூடி பூட்டு போடும் ஆசிரியர்கள் சங்க ஜாக்டோஅமைப்பின் 08.10.2015 மற்றும் 01.02.2016 போராட்டங்களுக்கும் எழுத்துப்பூர்வஉறுதி அளிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகளை இழுத்து மூடி பூட்டு போடும் ஜாக்டோஅமைப்பின் போராட்டத்தின்போது பள்ளிகளை இயக்க தமிழக அரசின் உத்தரவின்படிமுழுமையாக பயன்படுத்தப்பட்ட 15000க்கும் மேலான பகுதிநேர பயிற்றுநர்களுக்குஊதிய உயர்வோ அல்லது பணி முன்னேற்றம் சார்ந்த எந்தவொரு உறுதிமொழியோ இதுவரைஇல்லாத நிலையால் ஏமாற்றத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். பகுதிநேரப்பணியைமாற்றி முழு நேரப்பணி கேட்டபோது  G.O.177-ப்படி பகுதிநேரப் பணியானதுதற்காலிகப் பணி என்பதால் முழுநேரப்பணி வழங்க முடியாது என கோரிக்கையை ஒருபக்கம்நிராகரித்த அரசு, மறுபக்கம் ஜாக்டோவின் பள்ளிகளை இழுத்து மூடும்போராட்டங்களின்போது மட்டும் பள்ளிகளை இயக்க பகுதிநேரப்பயிற்றுநர்களைமுழுநேரமாக பணியாற்ற உத்தரவிட்டு பயன்படுத்துகிறது. அரசின் இரட்டைநிலைமுரண்பாடு 5 ஆண்டுகளாகியும் களையப்படவில்லை.

    8. தமிழக அரசின் மொத்த கடனில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ரூபாய்46000 கடனாக அரசால்  சுமத்தப்படுகிறது. பகுதிநேர பயிற்றுநர்களின் ஒருகுடும்பத்திற்கு  தாய்-தந்தை, கணவன்-மனைவி, குடும்பத்திற்கு ஒரே ஒரு குழந்தைஎன்ற கணக்கில் மதிப்பிட்டால், ஒட்டுமொத்தமாக இந்த 15169 பயிற்றுநர்களின்குடும்பங்களின் கடனான சுமாராக நானூறு கோடி ரூபாய் வருகிறது. எதிர்பாராமல்வரும் அரசின் கடனை சுமக்கும் வேளையில் தனி ஒருவனின் அரசு வேலையைநிரந்தரப்படுத்த வேண்டி எதிர்பார்ப்போடு கூடுதல் கடனை ஏற்க தயராகஇருக்கின்றனர்.  எனவே மத்திய அரசின் திட்ட வேலையாக இருந்தாலும், மாநில அரசேபணிநியமனம் செய்திருக்கிறது. ஆகவே மாநில அரசே 5 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும்பகுதிநேர பயிற்றுநர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த  ஆண்டுக்கு 400 கோடிகூடுதலாக நிதி ஒதுக்கி அனைவரையும் பணி நிரந்தரம் செய்துதர வேண்டும்.பணிநிரந்தரத்திற்கு இதுவரை அரசு கவனம் செலுத்தவில்லை.

    9. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விரைவில் ஏழாவது ஊதியக் கமிஷன்அமுல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு அகவிலைப் படியை உயர்த்தும்போது, மாநிலஅரசும் அவ்வப்போது உயர்த்தி வழங்கி வருகிறது. எனவே ஆண்டு ஊதிய உயர்வை வழங்கவேண்டும்.

    உச்ச நீதிமன்றம் கூறியபடி மொத்தவிலைக் குறியீட்டு எண், அகவிலைப் படிஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு  தொகுப்பூதிய பணி செய்பவர்களுக்கு குறைந்தபட்சஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும்.  ஒப்பந்த பணியாளர்களுக்கு, நிரந்தரப்பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சம வேலை, சம ஊதியம் என்றதத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள்ஜே.எஸ்.கெஹர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்குஆதரவாக வழங்கிய தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். குறைந்த பட்சம் சிறப்பு காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்.

    நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையம் அரசுப் பணியை தற்காலிகமாக, ஒப்பந்தமுறையில், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிபவர்களின் தற்போதையநிலைகள், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை தானாக முன்வந்துகண்காணித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். தற்காலிக, ஒப்பந்த, தொகுப்பூதிய,தினக்கூலிப் பணி செய்து வருபவர்களை துறை ரீதியாக கணக்கெடுத்து அரசு வெள்ளைஅறிக்கை வெளியிட வேண்டும். 18 வயது முடித்த அனைவருக்கும் கல்வித் தகுதிக்கேற்பவேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதை முதன்மைப் பணியாக செய்ய வேண்டும்.

    அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படவேண்டும். காலிப்பணியிடங்களில் தற்போது பணி புரிந்து வருபவர்களையே நிரந்தரம் செய்திட நடைபெறஇருக்கிற சட்டசபை கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து உதவிடவேண்டும். சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் பகுதிநேரப்பயிற்றுநர்களுக்கு, அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்குரிய சலுகைகளை பெற்றுத்தரஅனைவரும் வேண்டுகிறோம்.அனைவருக்காகவும்,

    கடலூர் செந்தில்,
    மாநில ஒருங்கிணைப்பாளர்,
    CELL No.: 9487257203.

    No comments: