கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி பரிமாற்றுத்திட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் வீராணம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, 20 மாணவ, மாணவியர் மற்றும் கவுண்டம்பாளையம் பள்ளி மாணவ, மாணவியர், 20 பேர் என, 40 பேர் பங்கேற்றனர்.
கணித ஆசிரியை திலகவதி, ஆங்கில ஆசிரியர்கள் உமா, பாபு, சசிக்குமார் மற்றும் அறிவியல் ஆசிரியர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று இணையதளத்தின் வாயிலாக உயிரினங்களின் பல்வேறு தன்மைகள் பங்கேற்று விரிவாக விளக்கினர்.
அறிவியல் ஆசிரியை கல்யாணி பள்ளி ஆய்வகத்தில் மாணவ, மாணவிகளுக்கு எளிய முறையில் சோதனைகளை செய்து காட்டினார்.
No comments:
Post a Comment