மதுரையில் பொது மாறுதல் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களின் பெயர்கள் விடுபட்டதால் அதிர்ச்சியில் உள்ளனர். ஜூனில் துவங்கிய மாறுதல் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்க விரும்பிய ஆசிரியர்கள், ஏப்.,லில் விண்ணப்பித்தனர். தலைமையாசிரியரிடம் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், கல்வித் துறை குறிப்பிட்டிருந்த நாளுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதற்கு தலைமையாசிரியர்கள் தான் பொறுப்பு. ஆனால், மாநிலத்தில் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் விவரம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும், இதனால் 'கவுன்சிலிங்'கிற்கு அவர்கள் அழைக்கப்படவில்லை என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் பிரபாகரன் கூறியதாவது:தலைமையாசிரியர் கவனக்குறைவால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் விவரத்தை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மேலுார் கல்வி மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில், 5 ஆசிரியர்கள் பெயர் விடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல பள்ளிகளில் ஆசிரியர்கள் விவரம் விடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. எனவே, விண்ணப்பம் அளித்து, விடுபட்ட ஆசிரியர்களையும் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்க வாய்ப்பளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment