Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Monday, June 23, 2014

  போலி பணி நியமன ஆணை: வேலூர் கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

  வேலூர் எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் விவகாரத்தில், அவர் போலி கையெழுத்து போட்டு பணி நியமன ஆணை வழங்கி உள்ளது அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவம் கல்வி துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக மதி என்ற பெண் அதிகாரி இருந்து வந்தார். இவரை சஸ்பெண்ட் செய்து தமிழக பள்ளி கல்வி துறை செயலர் ஷபிதா நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
  ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணத்தை வெளியிடவில்லை. இந்த நிலையில், எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த மதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது அம்பலமாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: 2012ம் ஆண்டு மாநிலம் முழுவதும் எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்தது. 

  இதற்காக மாவட்டம் தோறும் ஓவியம், தச்சு, கணினி, உடற்கல்வி உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தகுதி உள்ளவர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்தது. அப்போது, வேலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில், அப்போது வேலூர் மாவட்ட எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த மதி, பணத்தை பெற்று கொண்டு, தனது செல்வாக்கை பயன்படுத்தி 7 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார். இந்த பணி நியமன ஆணையில் ரெகுலர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கையெழுத்து போட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், எஸ்எஸ்ஏ திட்ட அதிகாரி மதியே பணி நியமன ஆணைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி பணியில் சேரும்படி உத்தரவிட்டார். போலி கையெழுத்து போடப்பட்ட பணி நியமன ஆணையை பெற்று கொண்டவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பணிக்கு சென்றனர். 

  அப்போது வேலூரில் அரசு பள்ளியில் இந்த பணி நியமன ஆணையை பார்த்த அப்பள்ளி தலைமை ஆசிரியை, ரெகுலர் முதன்மை கல்வி அதிகாரி பொன்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நியமன ஆணையில் உங்கள் கையெழுத்து வேறு மாதிரி உள்ளதே என்று சந்தேகத்துடன் கேட்டார். உடனே அந்த பள்ளிக்கு சென்ற பொன்குமார், அந்த நியமன ஆணையை வாங்கி பார்த்தார். அதில் போலி கையெழுத்து போடப்பட்டுள்ளதை கண்டுபிடித்தார். இதுகுறித்து பள்ளி கல்வித்துறை செயலருக்கு ஆதாரத்துடன் நியமன ஆணை உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைத்தார். அதன்பேரில் இணை இயக்குனர் பழனிசாமி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த அதிகாரிகள் குழு உண்மை நிலையை மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எஸ்எஸ்ஏ திட்ட அதிகாரி மதிக்கு நோட்டீஸ் அனுப்பட்டது. ஆனால் அவரால் உரிய விளக்கம் அளிக்க முடியவில்லை. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

  1 comment:

  Anonymous said...


  Anonymous23 June 2014 12:58
  The Director of School Education listed the dates for Teachers' Counselling and the procedure to be followed and terms & conditions to be applied for the year 2014. Thiis is OK. At the same time, why not he communicate the actual vacancy positions of PGs through DSE's website (or) thro' Tamil Dailies ? If the Secretary and DSE happened to face any political pressure from Education Minister, why should they fail to intimate to their high officials like "Chief Secretary" (or) PAs to CM directly, (or) atleast Teachers' Associations. The Secretary to Edn. is a female IAS, who is appreciated for daring suitable action towards subordinates for their erring attitudes, has been taking the lead of Edn.Dept. nearly for 4 years She knows both in & out of Counselling Activities, and ways & means of hiding (or) blocking the vacancy posts to the counselling teachers. I assume she might play lop-sided role in her administration towards community. She has more chances of meeting the CM every now and then. Why she is afraid of bringing this malpractices to the notice of CM ? As they are quiet on seeing this contradictory practices, her subordinates in District Level bureacracts are taking their ropes very lenient and act according to their whims and fancies. WILL BOTH SECRETARY TO EDU.. & D.S.E. ENSURE RECTIFYING THIS EVIL PRACTICES ATLEAST FOR THE ENSUING DAYS IN COUNSELLING IN DISTRICT LEVEL ?

  What about the Tirunelveli CEO ? His name (Jeyakkannu) was familiar in swindling funds and misappropriation of govt. funds and his name appeared in leading Tamil Dailies a week ago. A leading lawyer had also charged with such allegations and reported to Tnvly District Collector for making enquiry in depth. Is the Secretary to Edn. knowing this matter or keeping mum by showing sympathy towards CEO-Tirunelvely ? The Public expect the honest gesture of administrative action towards such kind of bureacrats for setting exemplary to District level Officials in School Edn. Department. Shall we expect her intervention, similar to the cases of CEO-Vellore and Salem ?
  - A Social Activist