Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, July 30, 2014

    பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு

    885 வட்டார வளமைய ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்தாமல் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    அனைத்து வட்டார வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்க பொதுச் செயலர் எம். ராஜ்குமார் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.மனு விவரம்: ஒவ்வோர் ஆண்டும் 500 வட்டார வள மையப் பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என 2006-இல் அரசு உத்தரவிட்டது.

    2012-2013 ஆம் ஆண்டில் 115 பயிற்றுநர்கள் மட்டுமேபட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், 385 வட்டார கண்காணிப்பாளர்கள் அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அரசாணைப்படி வட்டார வள மைய பயிற்றுநர்கள்தான் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். 385 வட்டார கண்காணிப்பாளர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்தது தவறு. 2013-2014 ஆம் ஆண்டு 500 பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கவில்லை.எனவே, மொத்தம் 885 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமிக்க 14.7.14 இல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


    அதைரத்துசெய்ய வேண்டும். 885 பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்த பின்பு உள்ள காலிப் பணியிடங்களில் நேரடியாக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், மனுவுக்கு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர்,இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    2 comments:

    Unknown said...

    Very good keep it up sir m
    Harikrishnan brte .kandamangalam Brc.villupuram DT.ARGTA associations secretary villupuram DT 9443378533

    Unknown said...

    Very good keep it up sir m
    Harikrishnan brte .kandamangalam Brc.villupuram DT.ARGTA associations secretary villupuram DT 9443378533