Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 24, 2014

    ரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

    'ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில், மூன்று ஆண்டுகளாக அல்லாடி வரும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியரை, பணி நிரந்தரம் செய்து, முறையான சம்பளம் வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும்' என, பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் மாநில அமைப்பாளர், சேசுராஜா, நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2011ல், 16,549 பகுதி நேர ஆசிரியரை நியமனம் செய்ய, முதல்வர் உத்தரவிட்டார்.



    ஓவியம், தையல், உடற்கல்வி என, பல பிரிவுகளின் கீழ், வாரத்திற்கு, மூன்று நாள் வேலை, மாதம், 5,000 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில், மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். இந்த காலத்தில், 5,000 ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? வருத்தமாக உள்ளது

    இது, தமிழக அரசுக்கு தெரியாத விஷயம் கிடையாது. ஆனாலும், எங்களின் பிரச்னையை, இதுவரை, கண்டு கொள்ளாமல் இருப்பது, வருத்தமாக உள்ளது. இந்த குறைந்த சம்பளத்திற்கு, ஏராளமான ஆசிரியர், 100 கி.மீ., முதல் 150 கி.மீ., துாரம் வரை பயணிக்கின்றனர். வாங்கும் சம்பளத்தில், பாதி தொகை, பஸ் செலவிற்கே போய்விடுகிறது. மீதியுள்ள சம்பளத்தை வைத்து, குடும்பத்தை ஓட்ட முடியாமல், அல்லாடி வருகிறோம். தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, சிறப்பு தேர்வு நடத்தி, பணிவரன் முறை செய்து, தமிழக அரசு, ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல், எங்களுக்கும், சிறப்பு தேர்வை நடத்தி, முறையான சம்பளத்தில், பணி நியமனம் செய்ய வேண்டும். மற்ற ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் பெற, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நாங்கள், பணியிட மாறுதலுக்கு வாய்ப்பே இல்லாமல், மூன்று ஆண்டுகளாக, ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறோம். பலரும், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எங்களது பிரச்னையை தீர்க்க, முதல்வர், முன் வர வேண்டும். இவ்வாறு, சேசுராஜா தெரிவித்தார்.

    1 comment:

    Anonymous said...

    Sir
    Kindly ask the person not to speak like this. because already Government is announced regular posting and waiting for that. also special teaches cannot appear exam. so kindly advice the person not to comment like this.